தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை பறிக்க முயற்சி

சிதம்பரம் நகரில் மர்மநபர் ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிக்க முயன்றுள்ளார். மர்மநபருடன் அவர் போராடி தப்பி கூச்சல் போட்டதால்

News image
Updated On :15 நவம்பர் 2013, 12:24 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் மர்மநபர் ஒருவர் ஸ்டேஷன் மாஸ்டர் வீட்டிற்குள் புகுந்து அவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிக்க முயன்றுள்ளார். மர்மநபருடன் அவர் போராடி தப்பி கூச்சல் போட்டதால் மர்மநபர் தலைமறைவானார்.

சிதம்பரம் பஸ்நிலையம் அருகே உள்ள சிவசிவ நகரில் வசிப்பவர் சிக்கந்தர்பாண்டே. சிதம்பரம் ரயில்நிலைய ஸ்டேஷன் மாஸ்டராக உள்ள இவரது மனைவி பெயர் ஸ்வேதா (25). வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு சிக்கந்தர்பாண்டே அருகாமையில் உள்ள மார்க்கெட்டிற்கு பொருள்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது மர்மநபர் ஒருவர் அவரது வீட்டிற்கு சென்று அழைப்புமணியை அழுத்தியுள்ளார். வீட்டின் கதவை அவரது மனைவி ஸ்வேதா திறந்த போது கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறிக்க முயன்றுள்ளார். அப்போது ஸ்வேதி மர்மநபருடன் போராடி வெளியே தள்ளிவிட்டு பால்கனிக்கு சென்று கதவை தாழிட்டு கூச்சலிட்டதால் மர்மநபர் தப்பிஓடியுள்ளார். இதில் ஸ்வேதாவிற்கு கையில் கத்திகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.