தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் புயல் பாதுகாப்பு நடவடிக்கை

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் கடலூர்-நாகப்பட்டினம் இடையே சனிக்கிழை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 3

News image
Updated On :15 நவம்பர் 2013, 1:07 pm

ஜி.சுந்தரராஜன்

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல் கடலூர்-நாகப்பட்டினம் இடையே சனிக்கிழை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு 3 ஏற்றப்பட்டுள்ளது. சனிக்கிழமை மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் புயல் பாதுகாப்பு நடவடிக்கைகள் வருவாய்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிதம்பரம் அருகே வல்லம்படுகை, புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, பெரியகுப்பம், ஜெயங்கொண்டப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் புயல் பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவையல்லாமல் பள்ளிகள், சமுதாயநலக்கூடங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்த் மேற்பார்வையில் வட்டாட்சியர்கள் எம்.விஜயா (சிதம்பரம்), வெங்கடாசலம் (காட்டுமன்னார்கோயில்) மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, புதுகுப்பம், சின்னூர், சி.புத்துப்பேட்டை, கிள்ளை, சாமியார்பேட்டை பகுதிகளில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. வெள்ளிக்கிழமை காலை முதல் கடல் கடும் சீற்றத்துடன் காட்சியளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.