கடலூரில் நகை கடையில் கதவை உடைத்து ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரை சேர்ந்தவர் சாந்திலால்(60). இவர் கடலூர் லாரன்ஸ் சாலையில் நகை கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை இரவு சாந்திலால் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி சென்றார். சனிக்கிழமை காலை வழக்கம்போல் சாந்திலால் நகை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் 4 இரும்பு ஷட்டர்களும் கேஸ் வெல்டிங் மூலம் உடைக்கப்பட்டு நகை கடை திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது கடையின் வைத்திருந்த 3 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 1 கோடி.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸில் சாந்திலால் புகார் அளித்தார். போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கைரேகை நிபுணர்களையும் வரவழைத்து தடயங்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எந்நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள கடலூர் லாரன்ஸ் சாலையில் கேஸ் வெல்டிங் இயந்திரத்தை கொண்டு வந்து கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.