விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சிறுமி திருமணத்தை தடுத்து அதிகாரிகள் நடவடிக்கை

விருதுநகர் அருகே இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் வசந்தி(17). இதே ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜரத்தினம் என்பவரின் மகன் பேச்சுமுத்துராஜ்(20) என்பவருக்கும் (புதன்கிழமை)

News image
Updated On :19 நவம்பர் 2013, 10:32 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நடைபெற இருந்த சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

விருதுநகர் அருகே இருக்கன்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகள் வசந்தி(17). இதே ஊரைச் சேர்ந்த உறவினரான ராஜரத்தினம் என்பவரின் மகன் பேச்சுமுத்துராஜ்(20) என்பவருக்கும் (புதன்கிழமை) திருமணம் நடைபெற பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை சிறுமி திருமணத்துக்கு நிச்சயார்த்தம் செய்யப்போவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரனுக்கு  தகவல் வந்தது.

உடனே மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி பாண்டியம்மாள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சமூக நலத்துறை அதிகாரி மற்றும் சமூக நலத்துறை ஆலோசகர் உள்ளிட்ட போலீஸார் விரைந்து சென்றனர். அங்கு மணமகள் வீட்டினர் நிச்சயம் செய்வதற்கு தயராகிக் கொண்டிருந்தனர்.  உடனே இருவீட்டாரைச் சேர்ந்தவர்களையும் அதிகாரிகள் அழைத்தனர்.

பின்னர் வயது குறைவாக திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அதனால், மணமகனுக்கும், மணமகளுக்கும் குறிப்பிட்ட வயதுக்கு பின் திருமணம் செய்வது தான் சரியானது என அதிகாரிகள் அறிவுரை கூறினா். அதோடு, அவர்களிடம் உறுதிமொழி கடிதமும் எழுதி வாங்கிக் கொண்டனர். இதனால், நாளை நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.