அவதூறு வழக்கு: பாளை. எம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்
முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், பாளையங்கோட்டை எம்எல்ஏ-வுமான டி.பி. மைதீன்கான் திருநெல்வேலி முதலாவது கூடுதல்


முதல்வர் ஜெயலலிதா தொடர்பாக அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், பாளையங்கோட்டை எம்எல்ஏ-வுமான டி.பி. மைதீன்கான் திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ டி.பி. மைதீன்கான், முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக, திருநெல்வேலி நீதிமன்றத்தில் அப்போதைய அரசு வழக்குரைஞரான எஸ்.முத்துக்கருப்பன் வழக்குத் தொடர்ந்தார். இப்போது, இவர் அதிமுக மாவட்டச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குத் தொடர்பான விசாரணை திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) நடைபெற்றது.
விசாரணைக்காக தனது வழக்குரைஞர்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார் மைதீன்கான். வழக்கை விசாரித்த நீதிபதி நந்தகுமார், விசாரணையை அடுத்த மாதம் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...