தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக-வுக்கு அகில பாரத அனுமன் சேனா ஆதரவு

ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.வி.

News image
Updated On :19 நவம்பர் 2013, 9:57 am

முருகன்

ஏற்காடு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக, இந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் எஸ்.வி. ஸிரிதரன், திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஏற்காடு இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரேஜாவுக்கு இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா ஆதரவு அளிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய நேர்மையான பிரதம வேட்பாளரான நரேந்திரமோடிக்கு ஆதரவு அளிக்கப்படும்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்புகள் உள்ளன. சில சொத்துகள் மீட்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்படாமல் உள்ளதை கண்டறிந்து அவற்றை கையகப்படுத்தி கோயில் கணக்கில் சேர்த்திட வேண்டும். அனைத்து கோயில்களிலும் இந்து சமயக் கல்வி கற்பிக்க வேண்டும். காதல் ஜிகாத் என்ற பெயரில் திட்டமிட்டு மதமாற்றம் செய்யும் செயல்கள் அண்மையில் அரங்கேறத் தொடங்கியுள்ளது. இந்த கட்டாய மதமாற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

மலப்புரம் மாநாடு: இந்து மக்கள் கட்சி என்பது தமிழக அளவில் அரசியல் இயக்கமாக உள்ளது. அகில பாரத அனுமன் சேனா அமைப்பு என்பது அரசியல் இயக்கமல்ல. அனுமன் சேனா அமைப்பின் கிளைகள் நாடு முழுவதும் உள்ளன. இந்த கிளைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் வரும் டிசம்பர் 24ஆம் தேதி கேரள மாநிலம், மலப்புரத்தில் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது எனவும் எஸ்.வி. ஸிரிதரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.