சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு அணிவிக்க ரூபாய் மூன்றரை கோடி மதிப்பில், 20 சவரனில் செய்யப்பட்ட இரு பவழமாலைகளை பக்தர் ஒருவர் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சிதம்பரம் சாஹரி அம்மாள் - விஸ்வநாத ஐயர் நினைவாக அவது குடும்பத்தினர் ஸ்ரீநடராஜர் கோயிலில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப்பெருமானுக்கு அணிவிக்க ரூபாய் மூன்றரை கோடி மதிப்பிலான இரு பவழ மாலைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். மாலையில் உள்ள பவழமணியின் எடை 961 கிராம், 600 மில்லியாகும். விலை உயர்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ரகமாகும் இந்த பவழமணி. இந்த பவழ மணிகளை கொண்டு 20 சவரனில் இரு பவழமாலைகள் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநடராஜர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இரு பவழ மாலைகளை விஸ்வநாத ஐயர் குடும்பத்தாரின் கட்டளை தீட்சிதரும், ஸ்ரீசபாபதி சங்கீத கானசபா செயலாளருமான ஸ்ரீஐயப்ப தீட்சிதர், கோயில் பொதுதீட்சிதர்களின் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் பட்டுதீட்சிதர், சோமாஸ்கந்தர் தீட்சிதர் ஆகியோரிடம் வழங்கினார். மேலும் இந்த பவழ மாலைகளை வருகிற மார்கழி ஆருத்ரா தரிசன திருவிழாவில் தேர் மற்றும் தரிசனத்தின் போது ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அணிவிக்கப்படுகிறது என ஸ்ரீஐயப்பதீட்சிதர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


