தந்தையை நடுரோட்டில் விட்டுச் சென்ற இரு மகன்கள் கைது! சிதம்பரம் காவல்நிலையத்தில் முதல் முறையாக வழக்கு
சிதம்பரத்தில் வயதான தந்தையை பராமரிக்காமல் நடுரோட்டில் அநாதையாக விட்டுச்சென்ற இரு மகன்களை நகர போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சிதம்பரத்தில் வயதான தந்தையை பராமரிக்காமல் நடுரோட்டில் அநாதையாக விட்டுச்சென்ற இரு மகன்களை நகர போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிதம்பரம் வெல்ல பிறந்தான் முதலியார் தெருவில் நாடார் மெஸ் நடத்தி வந்தவர் பாஸ்கர் நாடார் (89). இவருக்கு சுந்தர் (52), ரமேஷ்பாபு (46) என்ற இருமகன்கள் உள்ளனர். தற்போது பஜனை மடத்தெருவில் தனது 2வது மகன் ரமேஷ்பாபு (46) வீட்டில் வசித்து வந்தார். தந்தையை யார் வைத்து பார்த்துக் கொள்வது என அண்ணன், தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த நவ.18-ம் தேதி பாஸ்கர நாடார் பஜனை மடத்தெருவில் சாலையோரம் பெட்டியுடன் அநாதையாக கிடந்துள்ளார். அவ்வழியே வந்த கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் பாஸ்கர நாடாரை மீட்டு சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள மாற்று்திறனாளிகள் தங்கும் இல்லத்தில் பாதுகாப்பாக கொண்டு தங்க வைத்தார்.
பின்னர் விசாரணையில் அண்ணன், தம்பி இருவரும் தந்தை பார்த்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டு நடுரோட்டில் போட்டு விட்டு சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் உத்தரவின் பேரில் நகர போலீஸார் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் புதன்கிழமை பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் வதை சட்டத்தின் கீழ் முதல் முறையாக வழக்குப் பதிந்து மகன் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...