தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 7 மாட்டுவண்டிகள் பறிமுதல்

சிதம்பரம் நகருக்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும்

News image
Updated On :22 நவம்பர் 2013, 12:13 pm

ஜி.சுந்தரராஜன்

வெள்ளாற்றிலிருந்து சிதம்பரத்திற்கு அனுமதியின்றி மணல் எடுத்து வந்த 7 மாட்டு வண்டிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் நகருக்கு மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வருவதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமிற்கு தகவல் வந்தது. அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீஸார் வடக்குமெயின் ரோட்டில் வெள்ளிக்கிழமை காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது உரிமம் இன்றி சிதம்பரம் அருகே உள்ள தாதம்பேட்டை வெள்ளாற்றிலிருந்து மணல் அள்ளி வந்த 7 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் நகர போலீஸார் சுரங்கச் சட்டத்தின் கீழ் ஆனந்த் (45)- சிதம்பரம், மணிகண்டன் (24)- மீதிகுடி, அசோக் (32)- கடவாச்சேரி, மேலமூங்கிலடியைச் சேர்ந்த கஜேந்திரன் (50), சாம்பமூர்த்தி (40), ராமலிங்கம் (25), மாஸ்கோ (45) ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிந்து சிதம்பரம் உதவிஆட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.