3 மாட்டு வண்டி, 10 யூனிட் மணல் பறிமுதல்

கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.  பனங்காட்டேரி
Updated on
1 min read

ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள், 10 யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், சற்குணக்குமார், சீனிவாசன், செந்தில்குமரன், ரமேஷ், ராஜேந்திரபிரசாத் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீர் சோதனை செய்தனர்.  பனங்காட்டேரி பகுதியில் 2 மாட்டு வண்டிகள், கன்னிகாபுரம் பகுதியில் ஒரு மாட்டு வண்டியில் முறையான அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்றது தெரியவந்தது.  அந்த 3 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

சோலூர் கிராமத்தில் ஆற்றங்கரையோர பகுதியில் மறைவிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com