தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதுராந்தகத்தில் குடிபோதையில் விவசாயி வெட்டி கொலை

மதுராந்தகம்  அடுத்த   அச்சிறுப்பாக்கம்ஓன்றியம்  செம்பூண்டி  கிராமத்தில்  குடிபோதையில்,  விவசாயியை வெட்டி க்கொன்ற   சம்பவம்  செவ்வாய்கிழமை   இரவு  நடைபெற்றது.

Updated On :27 நவம்பர் 2013, 4:35 pm

மதுராந்தகம்  அடுத்த   அச்சிறுப்பாக்கம்ஓன்றியம்  செம்பூண்டி  கிராமத்தில்  குடிபோதையில்,  விவசாயியை வெட்டி க்கொன்ற   சம்பவம்  செவ்வாய்கிழமை   இரவு  நடைபெற்றது.

மதுராந்தகம்  அடுத்த   அச்சிறுப்பாக்கம்ஓன்றியம்  செம்பூண்டி  கிராமத்தை  சேர்ந்தவர்  செல்லப்பன்  (வயது  52)     இவர்  விவசாயி.   அதேப்பகுதியைச்  சேர்ந்தவர் ஏழுமலை  (வயது  27)  விவசாயி செல்லப்பனுக்கு  உறவினர்  இந்த ஏழுமலை.    சில  மாதங்களுக்கு  முன்பு   நிலத்தில்   தண்ணீர்  பாய்ச்சுவதில்   முன்விரோதம்  ஏற்பட்டு   இருந்து வந்துள்ளது.   சம்பவத்தன்று  இரவு  வழக்கம்  போல  செல்லப்பன்   தனது  நிலத்தில்  தண்ணீர்  பாய்ச்சிவிட்டு   வீட்டுக்கு  வந்தபோது  எதிரில்  குடிபோதையில்  ஏழுமலை வந்து  அவரிடம்  தகராறு  செய்துக்கொண்டே  தான்  மறைத்து  வைத்திருந்த  கத்தியால்  செல்லப்பனின்  கழுத்தை  அறுத்து  கொலை  செய்துவிட்டு   தப்பி  ஓடிவிட்டார்.     இதுப்பற்றி   தகவலறிந்த  மதுராந்தகம்  போலீஸ்  டி.எஸ்பி.   ராஜேந்திரன்,  மேல்மருவத்தூர்  போலீஸ்  இன்ஸ்பெக்டர்  ரங்கநாதன்   ஆகியோர்   நேரில்   சென்று   விசார்த்தனர்.    இறந்து போன  விவசாயிக்கு  ராணி  என்ற  மனைவியும்,  2மகன்களும், 2 மகள்களும்   உள்ளனர்.  இது குறித்து   மேல்மருவத்தூர்  போலீசார்   வழக்கு  பதிவு   செய்து  விசாரித்து   வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.