தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிறார் தொழிலாளர்கள் 7 பேர் மீட்பு

தருமபுரி மாவட்டத்தில் சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்திலுள்ள

News image
Updated On :27 நவம்பர் 2013, 10:13 am

ராதாகிருஷ்ணன்

தருமபுரியில் ஜவுளிக்கடை, தேநீர் கடைகளில் பணி புரிந்த வந்த 7 சிறார் தொழிலாளர்கள் புதன்கிழமை மீட்கப்பட்டனர்.

தருமபுரி மாவட்டத்தில் சிறார் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்திலுள்ள அங்காடிகள், உணவகங்கள் மற்றும் தொழில்சாலைகளில் ஆய்வு மேற்கொள்ள தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலரகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதையொட்டி அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு மீட்கப்படும் சிறார்கள் தங்களது கல்வியை தொடரும் வகையில் சிறப்பு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.

இதில் ஆட்சியர் கே.விவேகானந்தன் உத்தரவின் பேரில், தருமபுரி நகரில் பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் எம்.எஸ்.சரவணன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் லட்சுமி, மருத்துவ அலுவலர் ஆனந்த், சைல்டு லைன் குபேந்திரன், மாவட்ட குழந்தை நல சங்க அலுவலர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், பேருந்து நிலையம் அருகில் உள்ள ஜவளிக்கடை, காலணி விற்பனைக்கடை, தள்ளுவண்டி ஆகிய கடை மற்றும் தேநீர் கடைகளில் பணி புரிந்த பிரபு(12), முருகன்(15), ஆதில்பாஷா(15), ராஜி(14), முனிரத்தினம், அஜித்(13) மற்றும் சிவக்குமார்(15) உள்ளிட்ட 7 சிறார் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறார் தொழிலாளர்களான அஜித் மற்றும் சிவக்குமார் ஆகியோர் பேருந்து நிலையத்தில் ஊசி மணிகளை விற்றவர்களாவர். இவர்களை அதிகாரிகள் மீட்டு, காப்பகத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, இரு சிறுவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், இரு சிறுவர்களும் தப்பி ஓடினர். மற்ற 5 சிறார் தொழிலாளர்களை தொப்பூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.