அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் : விபத்து உள்ளிட்ட வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் சாவு

விருதுநகர் சிவன்கோவில் தெப்பம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மகேஸ்வரி(31). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்தநிலையில் குடிப்யிருப்பருகே

Updated On :28 நவம்பர் 2013, 11:16 am

விருதுநகர் பகுதியில் விபத்து மற்றும் தெப்பக்குளத்திற்குள் தவறி விழுந்தது உள்ளிட்ட வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர். 

    விருதுநகர் சிவன்கோவில் தெப்பம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் மகேஸ்வரி(31). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்தநிலையில் குடிப்யிருப்பருகே உள்ள சிவன்கோயில் தெப்பம் பகுதியில் அடிக்கடி சுற்றிக் கொண்டிருப்பாராம். இதேபோல், புதன்கிழமை மாலையிலும் இக்கோயில் தெப்பம் பகுதியில் உள்ள சுற்றுச் சுவரில் ஏறி அமர முயற்சித்துள்ளார். அப்போது, கால் தடுக்கி தெப்பக்குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளார்.

     உடனே அப்பகுதியில் உள்ள சாமி வழிபாடு செய்ய வந்தவர்கள் உள்ளே இறங்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டு அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது பாட்டியம்மா முத்துலட்சுமி பஜார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

       டிராக்டர் மோதி இளைஞர் சாவு: விருதுநகர் அருகே சூலக்கரையைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் பொன்னுப்பாண்டியராஜா(33). இவர் புதன்கிழமை சூலக்கரையிலிருந்து-தாதம்பட்டி சாலையில் உள்ள தனது தோட்டத்திற்கு சைக்கிளில்  சென்றாராம். அப்போது, இதே பகுதியைச் சேர்ந்த சிவராம் என்பவர் விருதுநகர் நோக்கி டிராக்டரில் சென்றாராம். அப்போது, அந்த வழியாக சைக்கிளில் வந்தவர் மீது டிராக்டர்  எதிர்பாரத விதமாக மோதியது. இதில், பொன்னுப்பாண்டிராஜா சம்பவ இடத்திலேயே  படுகாயம் அடைந்தார்.

      இதையடுத்து, அருகில் இருந்த உறவினர்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது சகோதரர் குமரன் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சிவராம் மீது வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்        

    விஷம் அருந்தி தற்கொலை: விருதுநகர் அருகே சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியம்மாள்(45). இவரது கணவர் மாரியப்பன்(55). இவர் கடந்த சில நாள்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் வேதனையில் இருந்துள்ளார்.இதனால், மனம் உடைந்த நிலையில் தனது தோட்டத்திற்கு சென்று பயிர்களுக்கு தெளிப்பதற்காக வைத்திருந்த ரோக்கர் மருந்தை குடித்து விட்டு படுத்து கிடந்தாராம். அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனே விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மனைவி பாண்டியம்மாள் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.