அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

பழுது நீக்க விடப்பட்ட காரில் இயந்திரத்தை மோசடி செய்த மெக்கானிக் மீது புகார்

விருதுநகர் அருகே பழுது நீக்கம் செய்வதற்காக விட்டிருந்த காரில் இயந்திரம் மற்றும் உதிரி பாகங்களை கழற்றி மோசடி செய்த மெக்கானிக் மீது  உரிமையாளர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

Updated On :28 நவம்பர் 2013, 10:03 am

விருதுநகர் அருகே பழுது நீக்கம் செய்வதற்காக விட்டிருந்த காரில் இயந்திரம் மற்றும் உதிரி பாகங்களை கழற்றி மோசடி செய்த மெக்கானிக் மீது  உரிமையாளர் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

விருதுநகர் அருகே ஆமத்தூர் போஸ் காலனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் நாகராஜ்(38). இவருக்கு சொந்தமான டாடா சுமோ வாகனம் பழுதானது. இந்த நிலையில் இதே பகுதியில் பழுது நீக்கும் ஷாப் நடத்தி வரும் தங்கப்பாண்டி என்பவரிடம் பழுது நீக்குவதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு விட்டுள்ளார். அதையடுத்து அடிக்கடி சென்று பழுது சரி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டாராம். அதற்கு, சரிசெய்யவில்லை எனக் கூறி தாமதம் செய்து வந்துள்ளார். இதையடுத்து, கடந்த 25-ம் தேதி சென்று கேட்டதோடு, வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது, அந்த வாகனத்தில் இயந்திரம் மற்றும்  உதிரி பாகங்கள் கழற்றப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டார். இது குறித்து மெக்கானிக்கிடம் கேட்டதற்கு வீட்டில் வைத்துள்ளதாக கூறி எடுத்து வரச்சென்றாராம். ஆனால், நீண்ட நேரமாகியும் வரவில்லையாம்.

பின்னர் இது குறித்து அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரித்ததில் செவல்பட்டி செல்லப்பாண்டி என்பவரின் வாகனத்தில் இயந்திரத்தை ஏற்றி மதுரை ஒத்தக்கடையில் விற்பனை செய்துள்ளதாக தெரியவந்தது. உடனே இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலையத்தில் நாகராஜ் புகார் செய்தார். அதன் பேரில் மெக்கானிக் தங்கப்பாண்டி(37), மற்றும் செல்லப்பாண்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.