ராஜஸ்தானில் நாளை சட்டசபை தேர்தல்
ராஜஸ்தான் மாநிலத்தில் 14வது சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும்


ராஜஸ்தான் மாநிலத்தில் 14வது சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பிரதான எதிர்கட்சியான பாஜகவிற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கடந்த ஒரு மாதமாக தீவிரப்பிரசாரம் மேற்கொண்டுவந்தனர்.
இந்நிலையில் நேற்றுமாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததையடுத்து பூத்சிலிப் மற்றும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை விநியோகிக்கும் பணி 99.55சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. .
199 தொகுதியில் 2087 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 4,8 கோடி பேர் இந்த தேர்தலில் வாக்களிக்வுள்ளனர். இந்த தேர்தலுக்காக 47223 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாளை காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் டிச.8ஆம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராவாரா அல்லது பாஜகவின் வசுந்தரா முதல்வராவாரா என்பது டிசம்பர் 8ஆம் தேதி மாலைதெரிந்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...