தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

சிதம்பரம், புவனகிரி தொகுதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவிஆட்சியர் மா.அரவிந்த் வரைவு வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எம்.விஜயா,

News image
Updated On :1 அக்டோபர் 2013, 2:27 pm IST

சிதம்பரம், புவனகிரி சட்டப்பேரவை தொகுதி 31-10-2013 வரையிலான வரைவு வாக்காளர் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உதவிஆட்சியர் மா.அரவிந்த் வரைவு வாக்காளர் பட்டியல்களை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் எம்.விஜயா, உதவிஆட்சியரின் நேர்முக உதவியாளர் தில்லைகோவிந்தன், துணை வட்டாட்சியர் (தேர்தல்) ஜே.முரளிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் உதவிஆட்சியர் செய்தியாளர்களிடையே தெரிவித்ததாவது: வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் மேற்கொள்ள இருப்பதால் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்கள்  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். வரைவு வாக்காளர் பட்டியல் அக்.2 அல்லது அக்.5 அன்று கிராம பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் உள்ளாட்சி மன்றங்களில் வாசிக்கப்படும். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக 6-10-2013, 20-10-2013 மற்றும் 27-10-2013 ஆகிய மூன்று நாட்களும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட அலுவலர் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது என உதவிஆட்யர் மா.அரவிந்த் தெரிவித்தார்.

தொகுதிவாரியாக வாக்குகள் விபரம்; சிதம்பரம்: மொத்த வாக்குச்சாவடிகள்-238, ஆண்கள்- 1,01,388. பெண்கள்- 1,00,929. மொத்த வாக்குகள்- 2,02,317. புவனகிரி: மொத்த வாக்குச்சாவடிகள்- 274, ஆண்கள்- 1,09,010. பெண்கள்- 1,05,009. மொத்த வாக்குகள்- 2,14,019. காட்டுமன்னார்கோயில்: மொத்த வாக்குச்சாவடிகள்-236, ஆண்கள்- 97,880. பெண்கள்- 91347. மொத்த வாக்குகள்- 1,89,229.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.