மோட்டார்சைக்கிளில் இருந்து விழுந்த இளம்பெண் சாவு
பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆண்டாள்அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சபரி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (20). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை


தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அருகே கணவருடன் மோட்டார்சைக்கிளில் சென்ற போது, தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்த இளம்பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஆண்டாள்அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சபரி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி (20). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் திருமல்வாடி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, தமிழ்செல்வி மோட்டார்சைக்கிளிருந்து தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து மாரண்டஹள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...