தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

அண்ணாமலைப் பல்கலையில் பறக்கும்படை அமைப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் முறைகேடுகளை களையவும், நிதிநெருக்கடியை சீரமைக்கவும் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால்

News image
Updated On :8 அக்டோபர் 2013, 11:21 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளை கண்காணிக்க "பறக்கும்படை" அமைக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட பின்னர் முறைகேடுகளை களையவும், நிதிநெருக்கடியை சீரமைக்கவும் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகளை கண்காணிக்க மாவட்ட வருவாய் அலுவலர் ஸ்ரீமாலினி தலைமையில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத அதிகாரிகள், ஊழியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. பறக்கும்படைக்கு தனிவாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும்படை அனைத்து புலங்கள், விடுதிகள் ஆகியவற்றை கண்காணித்து குறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து அறிந்து பல்கலைக்கழக நிர்வாகி மூலம் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளும் என பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.