மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு

வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. அதிகபட்சமாக விருதாச்சலத்தில்

Updated On :15 அக்டோபர் 2013, 3:33 pm

தமிழகம், புதுவையில் புதன்கிழமை மழையோ அல்லது இடியுடன் மழையோ பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச் சலனத்தின் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. அதிகபட்சமாக விருதாச்சலத்தில் 70 மி.மீ. மழை பெய்தது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் சில இடங்களில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் செவ்யாய்க்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு மில்லிமீட்டரில்:

விருதாச்சலம் 70, சிதம்பரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை- 40, காட்டுமன்னார்கோயில் கள்ளக்குறிச்சி 20, செங்கம், மயிலாடுதுறை 10.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.