கணவனை கொலை செய்த மனைவி உள்பட 2 பேர் கைது
பெரம்பலூர் அருகே, செவ்வாய்க்கிழமை இரவு தகராறில் ஈடுபட்ட கணவனை, அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி, மருமகனை பெரம்பலூர் போலீஸôர் புதன்கிழமை காலை கைது செய்தனர்.


பெரம்பலூர் அருகே, செவ்வாய்க்கிழமை இரவு தகராறில் ஈடுபட்ட கணவனை, அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி, மருமகனை பெரம்பலூர் போலீஸôர் புதன்கிழமை காலை கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி மகன் செல்லதுரை (எ) பாண்டியன் (41) விவசாயி. அவரது மனைவி செல்லம்மாள் (எ) கல்யாணி (38). தம்பதியினருக்கு செல்வராணி (20), செல்வி (17) மகள்களும், கோவிந்தராஜ் (16) மகனும் உள்ளனர். இந்நிலையில், செல்வராணியின் கணவன் அய்யலூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் பாலசுப்ரமணியனுக்கும் (21), கல்யாணிக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பாண்டியன், கல்யாணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தாராம். இதனிடையே, செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கல்யாணியும், பாலசுப்ரமணியும், பாண்டியனை தாக்கி, அரிவாளால் வெட்டினராம். இதில் பலத்த காயமடைந்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீஸôர் சம்பவ இடத்திற்கு புதன்கிழமை காலையில் சென்று, இறந்தவரின் உடலை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து பாண்டியனின் தந்தை குருசாமி அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் (பொறுப்பு) சிவசுப்ரமணியன் வழக்குப் பதிந்து மேற்கண்ட இருவரையும் கைது செய்து, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...