மதுரை விமான நிலையத்திலிருந்து நேரடியாக துபாக்கு நவ-21ம் தேதியிலிருந்து விமான சேவை தொடங்க இருப்பதாக மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மதுரை விமான நிலையம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமான போக்குவரத்தை தொடங்க வேண்டும் என தொழில் பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மூலம் கொழும்புக்கு நேரடியாக விமானச் சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நவ.21ம் தேதியிலிருந்து இங்கிருந்து துபாய்க்கு நேரடியாக விமானச் சேவை தொடங்கி, தொடர்ந்து நாள்தோறும் இயக்கப்பட இருக்கிறது.
இந்த விமானம் மதுரையிலிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு நான்கரை மணிநேரத்தில் துபாய் சென்றடையும். பின்னர் அங்கிருந்து அதிகாலையில் புறப்பட்டு 9.45-மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வந்து சேரும். எனவே இந்த விமானச் சேவையின் மூலம் காய்கறிகள், மலர் வகைகள், மருத்துவப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை கொண்டு செல்வதற்கு வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தென்மாவட்டங்களில் இருந்து துபாய் பகுதியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் எளிதாக தங்களது சொந்த ஊர்களுக்கு வந்து செல்வதற்கு பயனுள்ளதாக விமானச் சேவை அமையும் என மக்களவை உறுப்பினர் மாணிக் தாகூர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல் பிரசார சீா்திருத்தம் கோரும் சுயேச்சைகள்!

தொகுதி நிலவரம் - வேப்பனஅள்ளி! அதிமுக, திமுக வெற்றியை தீா்மானிக்கும் தவெக, நாதக!

பரமத்தி வேலூா் தொகுதி! மீண்டும் நேரடி போட்டியில் திமுக-அதிமுக!
தொகுதி நிலவரம்- சேலம் மேற்கு! நான்குமுனைப் போட்டியால் விசிலடிக்கும் வேட்பாளா்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


