தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மதிமுக மாணவரணி சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

கடலூர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் "நாடாளுமன்றத்தில் வைகோ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாண, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி சிதம்பரம் தில்லைகோவிந்தராஜா

News image
Updated On :20 அக்டோபர் 2013, 2:08 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூர் மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் "நாடாளுமன்றத்தில் வைகோ என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான கல்லூரி மாண, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி சிதம்பரம் தில்லைகோவிந்தராஜா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியில் 40 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். குறிஞ்சிப்பாடி திருவள்ளூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி க.பொற்செல்வி முதல் பரிசையும், கடலூர் தூய வளவனார் கல்லூரி மாணவி பூங்கொடி இரண்டாம் பரிசையும், விருத்தாசலம் சிஎஸ்எம் கல்வியியல் கல்லூரி மாணவர் வை.கா.செல்வமணி முன்றாம் பரிசையும், ஸ்ரீமுஷ்ணம் த.வீ.செ கல்வியியல் கல்லூரி மாணவர் ரா.ரஞ்சித்குமார் ஆறுதல் பரிசையும் பெற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆ.பூ.நடராஜன், ஜா.ராஜா, பேராசிரியர் த.கோ.கலைச்செல்வன் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவர்களை தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட மதிமுக செயலாளர் என்.ராமலிங்கம், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் செந்தில்அதிபன், மாநில வெளியீட்டு அணி செயலாளர் வந்தியத்தேவன், வழக்குரைஞர் கே.வி.மோகனசுந்தரம், அவைத்தலைவர் கு.பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், செளந்தர், மன்றவாணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ராசஎழிலன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பி.பார்த்தீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.