தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் வந்த விவேகானந்தர் ரதத்திற்கு சிறப்பான வரவேற்பு!

சுவாமி விவேகானந்தர் ரதம் திங்கள்கிழமை மாலை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது. இந்த ரதம் சிதம்பரம் நகரில் அக்.21, 22 தேதிகளில் பவனி வர உள்ளது. சிதம்பரம் வந்த ரதத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணா

News image
Updated On :21 அக்டோபர் 2013, 12:50 pm

ஜி.சுந்தரராஜன்

சுவாமி விவேகானந்தர் 150வது ஆண்டு பிறந்த தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது உருவம் தாங்கிய விவேகானந்தர் ரதம் வலம் வருகிறது.

சுவாமி விவேகானந்தர் ரதம் திங்கள்கிழமை மாலை சிதம்பரம் நகருக்கு வருகை தந்தது. இந்த ரதம் சிதம்பரம் நகரில் அக்.21, 22 தேதிகளில் பவனி வர உள்ளது. சிதம்பரம் வந்த ரதத்திற்கு ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளியில் ரதத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளிக்குழுச் செயலர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் எஸ்.ஆர்.திருநாவுக்கரசு, தலைமை ஆசிரியர் ஆர்.ரவிசங்கர், ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர் கனகராஜன், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், பொறியாளர் ஆர்.எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்று பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர்.

அக்.22-ம் தேதி இன்று செவ்வாய்க்கிழமை விவேகானந்தர் ரதம் தேரடிப்பிள்ளையார் கோயில் தெருவிலிருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கீழவீதி வி.கே.ஆர்.திருமண மண்டபத்தை அடைகிறது. பின்னர் அங்கு பொதுக்கூட்டமும், ஓப்புவித்தல்போட்டி, பேச்சுப்போட்டி, இசைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.