தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்கள் சேதம்: 16 பேர் கைது

சிதம்பரம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் இருதரப்பைச் சேர்ந்த 16 பேரை  கைது

News image
Updated On :22 அக்டோபர் 2013, 1:36 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் இருதரப்பைச் சேர்ந்த 16 பேரை  கைது செய்தனர். மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே அத்தியாநல்லூர் கிராமத்தில் உள்ள பஸ்நிறுத்தம் அருகே உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் செவ்வாய்க்கிழமை காலை பாமகவினரால் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பாமக கொடிக்கம்பத்தை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், புதுச்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். பின்னர் புதுச்சத்திரம் இருதரப்பினரிடம் புகாரை பெற்று வழக்குப் பதிவு செய்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக பாமக தரப்பில் பரங்கிப்பேட்டை நகரச் செயலாளர் செல்வபிரதீஷ் (26), ஹரிராஜபுரத்தைச் சேர்ந்த அன்பு (25), கலைமணி (19), துளசிராஜன் (21), அத்தியாநல்லூரைச் சேர்ந்த குருமூர்த்தி (20), அருண்மொழிதேவனைச் சேர்ந்த சிவா (19), சண்முகம் (18), சில்லாங்குப்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (26), கொத்தட்டையைச் சேர்ந்த 9 பேரையும், பாமக கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியதாக அத்தியாநல்லூரைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாண்டியன் (32), சுப்பிரமணி (41),தேவநாதன் (25), சுரேஷ்குமார் (27), இளையராஜா (33), விநாயகமூர்த்தி (18), வடிவேல் (38) ஆகிய 7 பேரையுல் புதுசத்திரம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.