மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளைஞர்கள் 2 பேர் சாவு

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் வெற்றிவேல் (26), திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ்குமார் (22). இருவரும், பெரம்பலூரில் இருந்து

News image
Updated On :24 அக்டோபர் 2013, 11:23 am

தர்மராஜ்

பெரம்பலூர் அருகே, புதன்கிழமை இரவு டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் வெற்றிவேல் (26), திருமாந்துறை கிராமத்தை சேர்ந்த தியாகராஜன் மகன் சதீஸ்குமார் (22). இருவரும், பெரம்பலூரில் இருந்து கீழக்குடிகாடு கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புதன்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லாபுரம் பிரிவுசாலை அருகே சென்றபோது, எதிரே சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெற்றிவேலும், சதீஸ்குமாரும் சம்பவ இடத்திலேயே புதன்கிழமை இரவு உயிரிழந்தனர்.

தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவர்களின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து  விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.