மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மையிட்டான்பட்டி பிரிவு அருகே நான்குவழிச்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலி தொழிலாளி இறந்து போனார்.
கள்ளிக்குடியைச் சேர்ந்த பாலகுருநாதன்(33)என்பவர் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார்.இவர் வியாழக்கிழமையன்று விருதுநகரில் கொத்தனார் வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் தனது இருசக்கரவாகனத்தில் கள்ளிக்குடிக்குச் சென்று கொண்டிருந்தார்.மையிட்டானபட்டி பிரிவு அருகே நான்குவழிச்சாலையில் பாலகுருநாதன் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.கள்ளிக்குடி போலீசார் பாலகுருநாதன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 31 - நேரலை!

இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

திரிணமூல் காங். எம்.பி மீது தாக்குதல்! சரிந்து விழுந்ததால் பரபரப்பு! | West Bengal
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


