தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்

தருமபுரி மண்டல கூட்டுறவுத் சங்கங்களின் இணைப்பதிவாளர் கி.ரேணுகா மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள 70

News image
Updated On :26 அக்டோபர் 2013, 1:26 pm

ராதாகிருஷ்ணன்

தருமபுரி மாவட்டத்தில் முறைகேடுகளில் ஈடுபட்ட இரண்டு நியாய விலைக்கடை விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தருமபுரி மண்டல கூட்டுறவுத் சங்கங்களின் இணைப்பதிவாளர் கி.ரேணுகா மற்றும் வட்ட வழங்கல் அதிகாரிகள் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் உள்ள 70 நியாய விலைக்கடைகளில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், திப்பிரெட்டிஅள்ளி மற்றும் குக்கல்மலை நியாய விலைக்கடைகளில் பொது விநியோகம் திட்ட பொருள்கள் விற்பனையில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இந்த கடையின் விற்பனையாளர்களான பி.சுந்தராஜன் மற்றும் எஸ்.மாதேஸ் ஆகிய இருவரும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, இருவரையும் சனிக்கிழமை கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கி.ரேணுகா தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.  மேலும், பொது விநியோக திட்டப் பணிக்கு குந்தகம் ஏற்படும் வகையிலும், முறைகேடுகளிலும் ஈடுபடும் விற்பனையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.