டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உணவு பாதுகாப்புச் சட்டத்தை திமுக ஆதரித்தது சரியான முடிவு: கருணாநிதி

உணவு மசோதாவை ஆதரித்து, தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு இதுவரை மாதம் 1.70 லட்சம் டன்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:28 pm

அரவிந்தன்

உணவு பாதுகாப்பு சட்டத்தைத் திமுக ஆதரித்தது சரியான முடிவுதான் என்று அக் கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உணவு மசோதாவை ஆதரித்து, தமிழக மக்களுக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு இதுவரை மாதம் 1.70 லட்சம் டன் என்ற அளவில் இருந்த அரிசி, இனிமேல் மாதம் ஒன்றுக்கு 2.37 லட்சம் டன் என்று உயர்த்தப்பட்டுள்ளது. அரிசியின் விலை கிலோ ரூ.3 மட்டும். இதை வாங்குவதற்கு ஆகும் செலவு 856.44 கோடி மட்டும்.இந்தப் பிரிவுகளின் கீழ் தமிழகம் இதுவரை பெற்றுவந்ததைவிட, கூடுதலாக 67 ஆயிரத்து 900 டன் அரிசி கூடுதலாகக் கிடைக்கும்.அதைப்போல வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு இனிமேல் 8.14 லட்சம் டன் அரிசியை மத்திய அரசு கூடுதலாக வழங்கும்.இவை தமிழக அரசுக்கு லாபங்கள்.

வறுமைக் கோட்டுக்கு மேல மற்றும் கீழ் ஆகிய இரண்டு வித அரிசிக்காகவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுக்கும் நிதி ரூ.1,434 கோடியாகும்.ஆனால் உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றுவதற்கு முன், ரூ.2,231 கோடி மத்திய அரசுக்குத் தமிழக அரசுக்குக் கொடுத்தது.இதன் மூலம் ரூ.797 கோடி தமிழக அரசுக்கு செலவு குறையும்.இதனால்தான் உணவு பாதுகாப்பு மசோதாவை திமுக ஆதரித்தது.இதையெல்லாம் மறைத்துவிட்டு,  உணவு பாதுகாப்புச் சட்டம் மூலம் தமிழகத்துக்கு கூடுதலாக ஆயிரம் கோடி செலவாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறுவது அப்பட்டமான பொய்.

உணவு மசோதாவை அதிமுக சார்பில் எதிர்ப்பதாகக் கூறவில்லை.திருத்தங்கள் மட்டுமே கோரியது.நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான பாஜகவே இந்தச் சட்டத்தை ஆதரித்தது.இந்தச் சட்டத்தை அதிமுக ஆதரிக்கவில்லை என்றால், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது, சட்டத்தை ஏற்கவில்லை என்று கூறி வெளிநடப்பு செய்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.