மதுரை மாவட்டம் ஆர்.வி.பட்டியில் உள்ள எஸ்.ஆர்.வி. நகரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவரின் வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் இருந்த இரும்புப் பெட்டகத்தை உடைத்து, அதனுள் இருந்த 50 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் பணம் ஆகியவற்றைக் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். பிரபாகரன், உறவினர் திருமணத்துக்காக சென்னைக்குச் சென்றுவிட்டு, இன்று காலை ஊர் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் அளித்தார். இது குறித்து திருநகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.