மினிடெம்போ கவிழ்ந்து பூ வியாபாரி சாவு: 30 பேர் படுகாயம்
உளுந்தூர்பேட்டை வட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு மினி டெம்போவில் இன்று காலை கடலூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். மினிடெம்போ-வைச் சேர்ந்த பிள்ளையார்குப்பம்


விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மினிடெம்போ கவிழ்ந்ததில் பூ வியாபாரி உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை வட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு மினி டெம்போவில் இன்று காலை கடலூரில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர். மினிடெம்போ-வைச் சேர்ந்த பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஒட்டிவந்தார். செல்லும் வழியில் கீழக்குப்பம் வேலூர் பஸ் நிறுத்தம் அருகே மினிடெம்போ-வின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினிடெம்போ சாலையில் கவிழ்ந்தது.
இதில் மினிடெம்போ வாகனத்தில் பயணம் செய்த கிளியூரைச் சேர்ந்த பூ வியாபாரி கோவிந்தசாமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கிளியூரைச் சேர்ந்த சாந்தி, வேம்பாயி, ராஜி, ரமேஷ், ஒட்டுநர் சிவக்குமார் உட்பட 30 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக அவ்வழியாக வந்த வாகனங்களில் ஏற்றி உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் உள்பட பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை ஆம்புலன்ஸ் மூலம் விழுப்புரம் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...