சிதம்பரத்தில் உதவிப் பேராசிரியர் வீட்டின் பின்புறக்கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த 8 பவுன் நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டுப் போயுள்ளன.
சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் தனம்நகரில் வசிப்பவர் எம்.மாசிலாமணி (50). ஜெயங்கொண்டம் கே.கே.சி பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரது மனைவி கண்ணகி (42) ஸ்ரீமுஷ்ணம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளார். இருவரும் வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிக்கொண்டு பணிக்கு சென்றனர். மாலை வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பின்புறக்கதவை உடைத்து மரம் ஆசாமிகள் உள்ளே புகுந்து பீரோவிலிருந்த 8 பவுன் நகைகள், இரண்டரை கிலோ வெள்ளிப் பொருள்கள் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாசிலாமணி கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். கடலூரிலிருந்து கைரேகை மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

