வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சம்பளத்தை வழங்க பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் கோரிக்கை

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சம்பளத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு

News image
Updated On :8 செப்டம்பர் 2013, 1:01 pm

G.Sundararaj

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சம்பளத்தை வழங்க வேண்டும் என அகில இந்திய பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அகில இந்திய பல்கலைக்கழகங்களின் ஊழியர் கூட்டமைப்பு 4-வது அகில இந்திய மாநாடு மற்றும் செயற்குழுக்கூட்டம் பெங்களூர் பல்கலைக்கழக ஞானபாரதி வளாகத்தில் கடந்த ஆக.30,31 தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் எனது சார்பில் கீழ்கண்ட தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. அண்ணாமலைப் பல்கலைக்கழக சட்டம் 2013 சட்டப்பேரவையில் திருத்தப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு 2 மாதங்கள் மேலாக நிலுவையில் உள்ளது. மத்தியஅரசு விரைந்து ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழக வளர்ச்சிக்கும், பல்கலைக்கழக ஊழியர்களின் ஊதியத்திற்கும் யுஜிசி மானியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஆட்சிமன்றம் மற்றும் ஆளவை மன்றங்களில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என அகில இந்திய மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.