சிதம்பரத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பீகார் மாணவர் சாவு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சோனுகுமார் (22). பீகாரைச் சேர்ந்த இம்மாணவர் அண்ணாமலைநகரில் சக மாணவர்களுடன் அறை எடுத்து


சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிள் விபத்தில் பீகாரைச் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இறந்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் சோனுகுமார் (22). பீகாரைச் சேர்ந்த இம்மாணவர் அண்ணாமலைநகரில் சக மாணவர்களுடன் அறை எடுத்து தங்கி படித்து வந்தார். இவர் இன்று மாலை அண்ணாமலைநகரிலிருந்து சிதம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த போது ரயில்வே மேம்பாலத்தின் சாலையோர கட்டையில் மோதி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் சோனுகுமார் இறந்தார். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...