வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் 32 சிலைகள் கரைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.சிதம்பரம் நகரில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 12:28 pm

G.Sundararaj

விநாயகர் சதுர்த்தி அன்று சிதம்பரம், அண்ணாமலைநகர், குமராட்சி பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிதம்பரம் தாலுக்காவில் மொத்தம் 91 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.சிதம்பரம் நகரில் 5 அடி உயரத்திலான மொத்தம் 11 விநாயகர்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இவையல்லாமல் சிதம்பரம் தாலுக்கா பகுதியில் 6 சிலைகளும், கிள்ளையில் 5 சிலைகளும், அண்ணாமலைநகரில் 14 சிலைகளும், புவனகிரியில் 8 சிலைகளும், மருதூரில் 8 சிலைகளும், பரங்கிப்பேட்டையில் 22 சிலைகளும், புதுச்சத்திரத்தில் 91 சிலைகளும் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

சிதம்பரம், அண்ணாமலைநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 32 சிலைகள் புதன்கிழமை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டன. பரங்கிப்பேட்டை, கிள்ளை, புதுச்சத்திரம் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சாமியார்பேட்டை, பெரியகுப்பம் பகுதி கடலிலும் கரைக்கப்பட்டது. எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.