தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு

சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

Updated On :13 செப்டம்பர் 2013, 8:00 am

சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை இறந்தார்.

சிதம்பரம் அருகே உள்ள பாளையஞ்சேர்ந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திகேயன் (16). இவர் ஒரத்தூர் திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்கு பின்புறம் உள்ள வெள்ளாற்றில் சக நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் மாணவர் கார்த்திகேயன் ஆற்று நீரில் மூழ்கினார். இதுகுறித்து சகமாணவர்கள் தெரிவித்ததை அடுத்து சேத்தியாத்தோப்பு தீயணைப்பு மீட்பு படையினர் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரம் போராடி மாணவர்கள் கார்த்தி சடலத்தை மீட்டனர்.

தகவல் அறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் எம்.விஜயா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். மாணவர் உடல் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.