தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: முந்திரி வியாபாரி கைது

பண்ருட்டி காவல் நிலையம் போக்குவரத்துத் துறை பிரிவில் உதவி ஆய்வாளராக  ஏ.அருண் பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி பணியில் இருந்த போது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்த வடக்கு

News image
Updated On :13 செப்டம்பர் 2013, 10:07 am

சீனிவாசன்

போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த முந்திரி வியாபாரியை பண்ருட்டி போலீஸார் கைது செய்தனர்.

பண்ருட்டி காவல் நிலையம் போக்குவரத்துத் துறை பிரிவில் உதவி ஆய்வாளராக  ஏ.அருண் பணியாற்றி வருகிறார். கடந்த 8ம் தேதி பணியில் இருந்த போது குடி போதையில் வாகனம் ஓட்டி வந்த வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி வியாபாரி கந்தவேல்(40) வழக்குப் பதிவு செய்துள்ளார்.வியாழக்கிழமை மதியம் நான்கு முனை சந்திப்பில் பணியில் இருந்த போக்குவரத்து காவலர் சண்முகத்தை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், உதவி ஆய்வாளர் அருணுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.இதுகுறித்து, சண்முகம் அளித்த புகாரின் பேரில் கந்தவேலை பண்ருட்டி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.