மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கீழ்ப்பாக்கம் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது

துணை மருத்துவப் பணிகளை செவிலியர்கள் செய்ய வேண்டும். அல்லது தாற்காலிக செவிலியர்கள் அந்தப் பணிகளுக்கென்று நியமிக்க வேண்டும் என்று கூறி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பயிற்சி

Updated On :18 செப்டம்பர் 2013, 1:54 pm

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் புதன்கிழமை(செப்.18)முடிவுக்கு வந்தது.

துணை மருத்துவப் பணிகளை செவிலியர்கள் செய்ய வேண்டும். அல்லது தாற்காலிக செவிலியர்கள் அந்தப் பணிகளுக்கென்று நியமிக்க வேண்டும் என்று கூறி கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்க்கிழமை காலை முதல் புதன்கிழமை காலை வரை மருத்துவமனையின் வளாகத்தில் இருந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.இதனைத் தொடர்ந்து புதன்கிழமை காலை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியிலும் 20 தாற்காலிக செவிலியர்களை நியமிக்க உள்ளோம். இன்னும் 30 நாள்களில் இந்தப் பணிகள் நிறைவடையும். தாற்காலிக செவிலியர்கள் நியமிக்கப்படும் வரை நோயாளிகளுக்கு ஊசி போடும் பணிகள், பரிசோதனைகள் செய்வது, பரிசோதனை முடிவுகளை சேகரித்து வருவது, ரத்தப் பிரிவுகளை ரத்த வங்கியில் இருந்து வாங்கி வருவது உள்ளிட்ட வேலைகளை பயிற்சி மருத்துவர்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.மருத்துவமனையின் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்வார்கள்.

பயிற்சி மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வழங்கப்பட வேண்டிய ஊதியம்(ஸ்டைஃபன்ட்) உடனடியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை ஏற்று பயிற்சி மருத்துவர்கள் தங்கள் பணிக்குத் திரும்பினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.