தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சிதம்பரத்தில் அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்ட போலி டாக்டர் கைது

சிதம்பரத்தில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்ட ஒருவரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :18 செப்டம்பர் 2013, 4:53 am

சிதம்பரத்தில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்ட ஒருவரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

சிதம்பரம் நகரில் ஹோமியோபதி முறை மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டு வருவாதல் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுவதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் நகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ஏற்கனவே  சங்கர், சரவணன், திருநாராயணன், திருஞானம் ஆகிய 4 போலி டாக்டர்களை கைது செய்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இளமையாக்கினார் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (58) 10ம் வகுப்பு மற்றும் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரது கிளினீக்கிலிருந்து அலோபதி மருந்து, மாத்திரைகள், ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.