எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சிதம்பரத்தில் பூட்டியிருந்த வீடு தீப்பிடித்து ரூ.5 லட்சம் பொருள்கள் சேதம்

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூட்டியிருந்து வீடு திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமுற்றது. வீட்டிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு உபயோகப்

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 10:37 am

G.Sundararaj

சிதம்பரத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பூட்டியிருந்து வீடு திடீரென தீப்பிடித்து முற்றிலும் எரிந்து சேதமுற்றது. வீட்டிலிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமுற்றன.

சிதம்பரம் நேதாஜிதெருவில் வசிப்பவர் பார்த்தீபன். இவர் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றிருந்தார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அருகாமையிலிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் ஜகாங்கீர்மமுகமது தலைமையில் தீயணைப்பு மீட்புத்துறையினர் 2 வாகனங்களில் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். தீ விபத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள், பள்ளி சான்றிதழ்கள், புத்தகங்கள் அனைத்தும் எரிந்து சேதமுற்றன. தீவிபத்து குறித்து நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.