சிதம்பரத்தில் ஹோமியோபதி படித்துவிட்டு அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்ட ஒருவரை நகர போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சிதம்பரம் நகரில் ஹோமியோபதி முறை மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டு வருவாதல் பொதுமக்கள் பலர் பாதிக்கப்படுவதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராமுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் நகரில் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு ஏற்கனவே சங்கர், சரவணன், திருநாராயணன், திருஞானம் ஆகிய 4 போலி டாக்டர்களை கைது செய்துள்ளார்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இளமையாக்கினார் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (58) 10ம் வகுப்பு மற்றும் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு, அலோபதி மருத்துவத்தில் ஈடுபட்டதாக டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரது கிளினீக்கிலிருந்து அலோபதி மருந்து, மாத்திரைகள், ஊசிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

