சிவகங்கை அருகே இளைஞர் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், அல்லூர் ஊராட்சி, பனங்காடி கிராமத்தைச் சேர்ந்த தலையாரி நாராயணனின் மகன் வெங்கேடேஷ் (28). இவருக்கு இப்பகுதியில் 36 ஏக்கர் நிலம் உள்ளது. தோட்டத்தில் உள்ள கிணற்று மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் தனது பக்கத்து வீட்டுக்காரரான இளையராஜா என்பவரின் உதவியுடன் புதன்கிழமை இரவு தோட்டத்தில் தங்கி மோட்டாரை சரி செய்யும் பணியினை மேற்கொண்டார். இரவு வெகுநேரமானதால் இருவரும் தோட்டத்து வீட்டிலேயே தங்கி விட்டனர்.
இந்த நிலையில், இன்று காலை இருவரும் பலத்த ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்து கிடந்தனர். வியாழக்கிழமை காலை இது குறித்த தகவல் போலீசாருக்குத் தெரிய வந்ததைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ், துணை கண்காணிப்பாளர் கி.ஸ்டாலின் ஆகியோர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
நகா்ப்புற போக்குவரத்து துறையில் ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கம்! என்சிஆா்டிசி மற்றும் ஐஐடி ரூா்கீ இடையே ஒப்பந்தம்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


