ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

நாசரேத் அருகே தந்தை, மகள் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை

நாசரேத் அருகே உடையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (54). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வெள்ளரி, கத்தரி விவசாயம் செய்து வருகின்றார். இஅவருடைய மனைவி ராசாத்தி (48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன்.

Updated On :19 செப்டம்பர் 2013, 10:20 am

நாசரேத் அருகே தந்தை - மகள் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

நாசரேத் அருகே உடையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (54). இவருக்குச் சொந்தமான தோட்டத்தில் வெள்ளரி, கத்தரி விவசாயம் செய்து வருகின்றார். இஅவருடைய மனைவி ராசாத்தி (48). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன்.

ஒட்டப்பிடாரத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இரண்டாவது பெண் லீமா வழக்குரைஞருக்குப் படித்து தந்தையுடன் இருந்து  பணி செய்து வருகிறார்.  மகன் செஞ்சு (16) நாசரேத்தில் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மனைவி ராசாத்தியை ஒட்டப்பிடாரத்தில் உள்ள மகள் வீட்டுக்கு அனுப்பி விட்டு, பைக்கில் தன் மகள் லீமாவுடன் வந்தார் செல்லத்துரை. அப்போது, அவரை, மர்ம கும்பல் ஒன்று, சரமாரியாக வெட்டியது. அதனை மகள் தடுத்தார். ஆனால், அவருக்கும் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தில் தந்தை மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பலியாயினர். இது குறித்து, சாத்தான்குளம் டிஎஸ்பி ராஜகோபால், நாசரேத் இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் விசாரணை நடத்தி, குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.