சிவகங்கை அருகே இரட்டை கொலை தொடர்பாக இளைஞர் 3 பேரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை தாலுகா காவல் சரகம், அல்லூர் ஊராட்சி, பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேஷ்(28), இவரது அண்டை வீட்டுக்காரர் இளையராஜா (26). இவர்கள் இருவரும் வெங்கடேஷின் தோட்டத்து கிணற்றில் உள்ள மோட்டாரில் பழுது ஏற்பட்டதால் அதனை சரி செய்வதற்காக புதன்கிழமை தோட்டத்திற்கு சென்றிருந்தனர். இரவு ஆனதால் இருவரும் தோட்டத்திலேயே தங்கி விட்டனர். அந்த சமயம் யாரோ இவர்களை பயங்கர ஆயுதங்களால் தாக்கி சம்பவ இடத்திலேயே படுகொலை செய்தனர்.
இது குறித்து தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இதே கிராமத்தைச் சேர்ந்த முத்தையாவின் மகன் சுரேஷ் (23), காளையப்பனின் மகன் ராஜசேகரன் (23), சுப்ரமணியனின் மகன் பாலமுருகன்(25) ஆகியோருக்கிடையே முன்விரோதம் இருந்தது தெரிய வந்தது. போலீஸார் தீவிர விசாரணை நடத்தியதில் மூன்று பேரும் சேர்ந்து புதன்கிழமை இரவு 11 மணி அளவில் வெங்கடேஷ் மற்றும் இளையராஜாவை படுகொலை செய்தது தெரிய வந்தது.
மூவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை கைப்பற்றினர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரெளடி கும்பலைச் சோ்ந்தவா் ஆயுதத்துடன் கைது

பொறியியல் பணி: கோவை - ஷொரணூா் ரயில் ரத்து

சாத்தூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறாா் நயினாா் நாகேந்திரன்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

