கடலூர் துறைமுகத்திலிருந்து கள்ளத் தோணி மூலம் இலங்கை அகதிகளை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப முயன்ற வழக்கில் மேலும் ஒருவரை போலீஸôர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
கடலூர் துறைகத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள் கள்ளத் தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாகக க்யூ பிராஞ்ச் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி கடலூர் துறைமுகம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் பைகளுடன் வந்த 28 பேரை க்யூ பிராஞ்ச் போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில், 18 பேர் முகாமில் பதிவு செய்யப்பட்டவர்கள் என்பதும், மீதமுள்ள 10 பேர் பதிவு செய்யாத அகதிகள் என்பதும் தெரியவந்தது. இவர்கள் அனைவரும் அரசின் அனுமதியின்றி கள்ளத்தோணி மூலம் ஆஸ்திரேலியா செல்வதற்காக ஏஜண்டுகளிடம் தலா 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியிருப்பதும் தெரியவந்தது.இந்த வழக்கில் கடலூர் துறைமுகம் போலீஸார் ஏற்கனவே 7 பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவ்வழக்கில் போலீஸார் தேடப்பட்டு வந்த சென்னை புழல் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரவியை (40) வெள்ளிக்கிழமை இரவு கடலூர் துறைமுகம் போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

