மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேலூரில் மலிவுவிலை அரிசி விற்பனை நிறுத்தம்: பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தமிழக அரசின் கிலோ ரூ.20 விலையிலான மலிவுவிலை அரிசி விற்பனை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி

News image
Updated On :23 செப்டம்பர் 2013, 9:39 am

தர்மராஜ்

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தமிழக அரசின் கிலோ ரூ.20 விலையிலான மலிவுவிலை அரிசி விற்பனை நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

அரிசி விலை உச்சபட்சமாக கிலோ ரூ.45-க்கு மேல் விலைஉயரத் தொடங்கியதும், பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்கும் வகையில் தமிழக முதல்வர் கிலோ ரூ.20 விலையில் அரிசி விற்பனையை தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின்கீழ் மேலூர் தாலுகாவிற்கு முதல்கட்டமாக ஒதுக்கப்பட்டது. மேலூர் நுகர்பொருள் வாணிபகழக கிடங்கில் வைக்கப்பட்டு ஒருமாதாமாக அதிகாரிகள் உரிய அனுமதியளிக்காததால் கிடங்கில் இருப்பு இருப்பது தினமணியில் ஜூலைமாதம் செய்திவெளியானது.

இதையடுத்து மேலூர் சந்தைப்பேட்டை விற்பனைசங்க கிடங்கில் ரூ.20 விலைக்கு அரிசி விநியோகமானது. மொத்த அரிசியும் விற்பனையாகிவிட்டது. வெளிமார்க்கெட்டைவிட விலை குறைவாகவும் அரிசி தரமாகவும் இருந்ததால் பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கினர். இந்தநிலையில் மதுரை அரிசி அரவை ஆலையில் ஸ்டாக் உள்ள அரிசியை காலிசெய்யும் நோக்கில் பழுப்பான விற்பனை செய்ய அதிகாரிகள் வலியுறுத்தல் காரணமாக கிலோ ரூ.20 அரிசி விற்பனை கடந்த 2 வாரமாக நிறுத்தப்பட்டுவிட்டது.

இந்நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் தினசரி மேலூர் விற்பனை சங்கக் கிடங்கை பார்த்து ஏமாற்ற்ததுடன் திரும்பிச் செல்கின்றனர். கிலோ ரூ.20 மலிவுவிலை அரிசி விற்பனையைத் தொடங்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.