தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வரப்பு தகராறு: விவசாய தம்பதியை துப்பாக்கியால் சுட்ட அண்டை நில விவசாயி

அரச்சலூரைச் சேர்ந்தவர்கள் நல்லசிவம் (32), சித்ராதேவி (23). இவர்களுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தின் சொந்தக்காரர் சுப்பிரமணி.

News image
Updated On :27 செப்டம்பர் 2013, 10:50 am

ஜபலின் ஜான்

ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் விவசாயியை துப்பாக்கியால் சுட்ட விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. 

அரச்சலூரைச் சேர்ந்தவர்கள் நல்லசிவம் (32), சித்ராதேவி (23). இவர்களுக்குச் சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்துக்கு அருகில் உள்ள நிலத்தின் சொந்தக்காரர் சுப்பிரமணி.

நல்லசிவத்துக்கும் சுப்பிரமணிக்கும் தங்கள் நிலத்தில் வரப்பு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சுப்பிரமணி, துப்பாக்கியால் நல்லசிவம் தம்பதி மீது சுட்டுள்ளார். அதில் நல்லசிவத்துக்கு தோள் பட்டையிலும், சித்ராதேவிக்கு கையிலும் காயம் ஏற்பட்டது.  இது குறித்து, அரச்சலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். காயம் அடைந்த இருவரும் ஈரோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.