சிதம்பரத்தில் உலக வெறிநோய் தினம்: 50 நாய்களுக்கு தடுப்பூசி
சிதம்பரத்தில் அவதார் டிரஸ்டு சார்பில் உலக வெறிநோய் தினத்தை (World Rabies Day) முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது.


சிதம்பரத்தில் அவதார் டிரஸ்டு சார்பில் உலக வெறிநோய் தினத்தை (World Rabies Day) முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி சனிக்கிழமை போடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விலங்கு நல பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டுள்ள அவதார் டிரஸ்ட் தலைவர் சி.எஸ்.பாலசுந்தரம் செய்திருந்தார். அரசு கால்நடை மருத்துவர்களான எம்.கணேசன், பி.பவானி ஆகியோர் தெருநாய்களுக்கு தடுப்பூசுகளை போட்டனர். டிரஸ்ட் செயலாளர் கே.சக்திவேல், துணைச் செயலாளர்கள் மண்ணை சிவா, ஏ.வெங்கடேசன், மருத்துவப் பிரிவு செயலாளர் ஜே.கண்ணன், உறுப்பினர்கள் ஆர்.ஜம்பு, டி.ராமலிங்கம், வேல்முருகன், சங்கர், மணிகண்டன், பிரசார செயலர் பொன்மயில் ஆகியோர் நாய்களை பிடித்து தடுப்பூசு போட உதவினர். சிதம்பரம் நகரில் பல்வேறு சாலைகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...