மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி கடலூர் மாவட்டம், ராமநத்தத்தில் இருந்து கண்டரக்கோட்டை வரை அக்டோபர் 28-ம் தேதி முதல் 3 நாட்கள் பிச்சை கேட்டு நடைபயணம் செல்லும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு மக்கள்நலப் பணியாளர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கடலூரில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்துக்கு மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சி. வேல்முருகன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேல், ஜோதி, மங்களூர் ஒன்றியத் தலைவர் செல்வராஜ், மகளிர் அணி செயலர் கண்ணகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் எஸ். முத்துதமிழரசன், பண்ருட்டி வட்டத் தலைவர் அரிகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன் பேசினர்.
வேலை இல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாக வறுமையில் வாடி வரும் மக்கள்நலப் பணியாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் வேலை பிச்சை கேட்டு நடைபயணம் செய்யும் போராட்டத்தை கடலூர் மாவட்டத்தில் அக்டோபர் மாதம் 28-ந் தேதி ராமநத்தத்தில் தொடங்கி 3 நாட்கள் நடத்த வேண்டும்.இதன்படி, ராமநத்தம், விருத்தாசலம், முதணை, முத்தாண்டிகுப்பம், மருங்கூர், காடாம்புலியூர் வழியாக பண்ருட்டி கண்டரக்கோட்டையை சென்றடையும் வகையில் 3 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணத்தில் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதல் வெற்றிக்காக ஏங்கும் கொல்கத்தா! குஜராத்துக்கு 181 ரன்கள் இலக்கு!
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என பாஜக முடிவு: முதல்வர் ஸ்டாலின்

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,094.6 கோடி டாலராக அதிகரிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

