சிதம்பரத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது தரக்குறைவாக விமர்சனம் செய்து பேசியதாக அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சல் சம்பத், பேச்சாளர்கள் தில்லை செல்வம், தில்லை சேகர் ஆகியோர் மீது நகர
போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் மேலவீதியில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரத்தின் போது நாஞ்சில் சம்பத் பேசுகையில் ஸ்டாலினை பற்றி அண்டங்காக்கை என்றும், மத்திய நிதிஅமைச்சரை கூத்தாண்டவர் கோயிலில் கும்மியடிக்கும் பயல் என்றும் பேசியதாகவும், பேச்சாளர் தில்லை செல்வம் பேசுகையில் டி.ஆர்.பாலு, கனிமொழியின் கைத்தடி என்றும், கொள்ளைக்கூட்டத்தின் கைத்தடி என்றும் பேசியதாகவும், தில்லை சேகர்பேசுகையில் விஜயகாந்தை குடிகாரகுப்பன் என்றும், பிரதமரை அவன், இவன் என்றும் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளுக்கு எதிராக பேசியதாக கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் நகர போலீஸார், நாஞ்சில் சம்பத்,
தில்லைசெல்வம், தில்லை சேகர் ஆகிய மூவர் மீது IPC 188, 171 (G) பிரிவின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குறுதிகூட கிடைக்காத மக்கள்!

புழல் ஏரிக்கரையில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா?
ஆயிரம் விளக்கு தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்!
தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா்: பாஜக ஓபிசி பிரிவு தேசியத் தலைவா் கே.லஷ்மண்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

