சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

தமிழகம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்: மக்கள் சக்தி இயக்கம் முடிவு

வாக்காளர்களுக்கு வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் முடிவு எடுத்துள்ளது என இயக்கத் தலைவர் முனைவர் ஏ.சண்முகம் தெரிவித்தார்.

News image
Updated On :10 ஏப்ரல் 2014, 12:20 pm

வாக்காளர்களுக்கு வாக்களிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கம் முடிவு எடுத்துள்ளது என இயக்கத் தலைவர் முனைவர் ஏ.சண்முகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை சிதம்பரத்தில் தெரிவித்தது: மக்கள் சக்தி இயக்க மாநில செயற்குழுக் கூட்டம் அண்மையில் திருச்சியில் கூட்டப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் தமிழகம் முழுவதும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது என முடிவெடுக்கப்பட்டது. மேலும் தமிழகஅரசு பூரண மதுவிலைக்க அமல்படுத்த வேண்டும், ஊழலை முற்றிலும் அகற்றும் வகையில், தன்னாட்சி அதிகாரம் பெற்ற லோக்ஆயுக்தா அமைப்பை உருவாக்க சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக அரசை மக்கள் சக்தி இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

2014-ம் ஆண்டு தமிழக பட்ஜெட்டில் தமிழக நிதியிலிருந்து, தமிழக நதிகள் இணைப்புத் திட்டத்திற்காக ரூ.119.98 கோடி நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசை கோருகிறோம். முழுமையான சேவை பெறும் உரிமைச் சட்டத்தை இயற்றுமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். காவிரி டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை பாழாக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் நலன் கருதி, எரிவாயு குழாய்களை விவசாய நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லாமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக கொண்டு செல்ல வேண்டும் என ஏ.சண்முகம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.